அச்சுத்துறையிலும் வரைகலைத் துறையிலும், lorem ipsum (லோரம் இப்சம்)[p][1] என்பது இடத்தை நிரப்பும் ஒரு வெற்று உரை ஆகும். பொதுவாக, ஒரு ஆவணம் அல்லது வடிவமைப்பின் எழுத்துரு, படிமங்கள், பக்க வடிவமைப்பு முதலிய தோற்றக்கூறுகளின் மேல் கவனத்தைக் குவிப்பதற்காக இவ்வுரை பயன்படுகிறது.
சீசர் எழுதிய இலத்தீன ஆக்கங்களில் இருந்து சொற்களை மாற்றியும், நீக்கியும், கூட்டியும் எழுதி இந்த லோரம் இப்சம் உரை பெறப்படுகிறது. இதனால், அது பொருள் மிக்கதாகவோ முறையான இலத்தீர உரையாகவோ இருப்பதில்லை.[1]
“லோரம் இப்சம்” என்பதனை மொழிபெயர்த்தால் “வலி அதனாலேயே” என்பது போல் பொருள் தரும் (dolorem = வலி, துயரம், அவதி ; ipsum = அதனாலேயே).